Tuesday, February 21, 2017

பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பெருந்தொகை நண்டுகள் உயிருடன் மீட்பு: சீனப் பிரஜை கைது


கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள சீன உணவகம் ஒன்றில் இருந்து, பெருந் தொகை நண்டுகள் உயிருடன் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவை உணவுக்காக பயன்படுத்தும் பொருட்டு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. 

நண்டுகளில் இனப் பெருக்க காலமான பெப்ரவரி, மார்ச் மற்றும் ஒக்டோபரில் அவற்றை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, குறித்த அமைச்சின் விசாரணை பிரிவினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நண்டுகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும், அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடலட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த உணவகத்தை நடத்திச் சென்ற சீனாவைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
Disqus Comments