[முஹம்மட் றின்ஸாத்] 2017-02-04 இலங்கை சனனாயக சோஷலிச குடியரசின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வுடன் சாய்ந்தமருது 04 கிராம உத்தியோகத்தர் பிரிவினுள் உள்ள மையவாடியில் பாரிய சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் SM.இல்பான், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் UL. ஜஹ்பர். அபிவிருத்தி உத்தியோகத்தர் A.ஜெஸீக்கா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மையவாடியில் காணப்பட்ட கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டு முறையாக உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கு கொண்ட அனைத்து பெரியோர்கள் தாய்மார்கள் இளைஞர்கள் சிறார்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கையர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம் எனும் வகையில் இலங்கை சனனாயக சோஷலிச குடியரசின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



