தமிழக முதல்வராக வி.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் சசிகலாவை தெரிவு செய்து ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.
பின்னர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை வழிமொழிந்தனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக முதலமைச்சராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்துள்ளது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜானகி, ஜெயலலிதாவை தொடர்ந்த தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, சசிகலாவிடம் ஓ.பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கடித்தை அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றே முதல்வராகிறார் சசிகலா- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு
இன்று மாலை 5.20 மணியுடன் நவமி முடிவதால் அதன் பின்னர் இன்றே சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது என தகவல்கள் வந்துள்ளன.
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க வெகு நாளாய் காத்து கொண்டிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பே இதை செய்ய நினைத்தவருக்கு மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் தடையாக இருந்தது.
இந்நிலையில், இன்று அவர் முதல்வராக பதவியேற்க உகந்த நாள் என ஜோதிடர்கள் கணித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி அதிமுக அமைச்சர்களையும் இன்று போயஸ் கார்டனுக்கு வரும்படி அவசர அழைப்பை சசிகலா விடுத்துள்ளாராம்.
சொத்துக் குவிப்பு வழக்கிலும் சீக்கிரமே தீர்ப்பு வரவுள்ள நிலையில், தற்போது போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள் கூட ஆரம்பித்து விட்டதாக வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன
மேலும், இன்று மதியம் நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.
பின்னர் மாலை 5.20க்கு நவமி முடிவதால், அதன் பிறகு தமிழக ஆளுநரை சந்தித்து எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்துடன் இன்றே சசிகலா முதல்வராக பதவியேற்ப்பார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

