முந்தல் பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவினால் விருதோடை, நல்லாந்தழுவ, புழுதிவயல் கிராம அதிகாரிகள் ஊடாக விருதோடை இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் வியாழக்கிழமை 02.02.2017 காலை 8.00 மணி முதல் விருதோடை பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள பாலர் பாடசாலையில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாமில் நோய்கள் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும் . அத்துடன் இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனைகளும் இங்கு இலவசமாகவே மேற்கொள்ளப்படவுள்ளது. இரத்தப்பரிசோதனைக்காக வருபவர்கள் இரவு 10 மணிக்குப் பின்னர் எதுவும் சாப்பிடாமல் ,குடிக்காமல் வர வேண்டும் . சிறுநீர் பரிசோதனைக்கு வருவோர் வீட்டிலிருந்தே சிறிய குப்பியில் சிறுநீரை எடுத்து வரவேண்டும் மற்றும் எண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக குப்பி ஒன்றையும் எடுத்து வருமாறு வேண்டுகிறோம்.
பலவித நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் உங்களது காலடிக்கே வந்துள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்
