Wednesday, February 1, 2017

அடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா? அதற்கு என்ன காரணம் தெரியுமா?

நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் 400 மி.லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும்.
எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உள்ள அனைவருக்குமே தோன்றும், இவ்வாறு தோன்றும் உணர்வுகள் இயல்பானது.
ஆனால், சிலருக்கு 400 மி.லி அளவை விட குறைவாக தேங்கி இருக்கும் போதே சிறுநீர் வருவது போன்ற உணர்வுகள் தோன்றும்.
அடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்வதற்கு என்ன காரணம்?
ஒருவரின் சிறுநீர்ப்பையில் 200 அல்லது 300 மி.லி அளவு சிறுநீர் தேங்கும் போதே அடிக்கடி சிறுநீர் வந்தால் அது ஏதோ ஒரு உடல்நிலை தொடர்பான பிரச்னையின் ஆரம்பமாகும்.
இது போன்ற கட்டுப்பாடற்ற சிறுநீர் பிரச்சனைகளுக்கு, தனது சிறுநீர் பையில் காசநோய் ,தொற்றுநோய், புற்றுநோய் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளின் காரணமாகக் கூட இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் இந்த நோய்களின் மூலம் எந்த காரணத்தால் சிறுநீர் அடிக்கடி வருகிறது என்பதை மட்டும் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றார்கள்.
எனவே அடிக்கடி சிறுநீர் பிரச்சனைகள் ஏற்பட்டால் காசநோய், நீரிழிவுநோய், புற்றுநோய் இது போன்ற நோய்களுக்கான பரிசோதனையை செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
Disqus Comments