Wednesday, February 15, 2017

டுபாயில் தங்கம் திருடியதற்காக ஆறு இலங்கையர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை!


டுபாயில் இலங்கையை சேர்ந்த ஆறு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்களும் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

குறித்த இலங்கையர்கள் வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அந்த நாட்டு நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது. 

இவர்களில் ஒருவர் சாரதியாக அங்கு பணியாற்றியுள்ளதாகவும், ஏனையவர்கள் வேலையற்றவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் குறித்த இலங்கையர்களில் நான்கு பேர் விமான நிலையத்தின் ஊடாக தப்பிச் செல்ல முற்பட்ட போது அந்த நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

சிறைத் தண்டனை காலம் நிறைவடைந்தப் பின்னர் குறித்த ஆறு பேரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Disqus Comments