Sunday, February 5, 2017

அலரி மாளிகையின் முன்னால் படம் பிடித்த இந்தியர் கைது செய்யப்பட்டார்!


அலரி மாளிகையின் முன்னால் படம் பிடித்துக் கொண்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று பகல் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் வெள்ளவத்தை பிரதேசத்தில் தங்கியிருக்ககூடியவர் என்று தெரிய வந்துள்ளது. 

அவர் சட்ட ரீதியான முறையிலேயே நாட்டில் தங்கியிருந்துள்ளார். 

சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 
Disqus Comments