Friday, February 10, 2017

சற்றுமுன் அட்டாளைச்சேனையில் காரும் உழவு இயந்திரமும் மோதி விபத்து.. (படங்கள் இணைப்பு)

(எஸ்.என்.எஸ்.றிஸ்லி) கல்முனை இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கார் ஒன்று அதே வழியால் சென்ற உழவு இயந்திரமொன்றுடன் மோதுண்டே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.. 

குறித்த உழவு இயந்திரமும் காரும் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்த வேளை திடீரென உழவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதையிலே நின்றுவிட்டதாகவும் இதனை எதிர்பாராமல் பின்னால் வந்த கார் மெசினுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கார் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானதாகவும் அதில் ஒரு மகனும் தாயும் தந்தையும் பயணித்ததாகவும் அங்கு கூடியிருந்தோர் தெரிவித்தனர். மேலும் காரின் பாதுகாப்பு பலூன் AIRBAG வெழியானதால் முன்னால் இருந்து பயணித்தவர்களுக்கு பாதிப்புக்கள் எதுவுமில்லை எனவும் தெரிவித்தனர்.  இருந்த போதிலும் காரில் வந்தவர்களும் உழவு இயந்திரத்தின் சாரதியும் அக்கரைப்பற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திட்டக்கு விரைந்த போக்குவரத்து போலீசார் விபத்து தொடர்பில் பதிவுகளை எடுத்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Disqus Comments