2016ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள், பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி உரிய தகுதிகளைப் பெற்றுக்கொண்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பம் செய்வதற்கான விண்ணப்பக் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியன நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கையேட்டை தெளிவாக வாசித்து ஒன்லைன் ஊடாக இணையத்தில் கற்கைநெறி மற்றும் பீடங்களுக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
