Tuesday, February 21, 2017

IPL போட்டியில் ரூ.2.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் மகன் முகம்மது சிராஜ்

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் இந்தியாவில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. மே மாதம் 21 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்றன.

இதில் பங்கேற்கும் உலக தர வீரர்களை வாங்கும் ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் உலகளவில், இந்திய அளவில் பல வீரர்கள் ஏலம் போகாமலும் சொற்பமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நிலையில்

ஹைதராபாத்தை சேர்ந்த ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த முஹம்மது சிராஜ் என்ற 22 வயது வேகப்பந்து வீச்சாளர் இன்றைய ஏலத்தில் ரூ.2.4 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் ஏழை ஆட்டோ ஓட்டுனரான முஹம்மது கௌஸ் என்பரின் மகனான இவர், இதில் கிடைத்த பணத்தின் மூலம் தனது பெற்றோருக்கு சொந்தமாக வீடு வாங்கி தருவேன் என்றும், திறமையாக
விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Disqus Comments