முஸ்லிம் காங்கிரஸை காப்பாற்றுவதற்காகவே அதன் தலைமைத்துவத்தை மாற்றவேண்டும் என தொடர்ந்தும் வழியுறுத்தி வருகின்றோம். எனக்கும் இந்த கட்சியில் தலைவருக்கும் எந்த தனிப்பட்ட கொடுக்கல் வாங்கள்களும் இல்லை, ஆனால் முஸ்லிம்களின் கட்சி அதனை வளர்ப்பது நம் அனைவரதும் கடமை என்பதனால் மட்டுமே இந்த செய்தியை தொடர்ந் தேர்ச்சையாக பேசுகிறோம்.
இன்றைய தினத்தில் நம் நாட்டு அரசியல்வாதிகளின் பட்டியலில் தகுதியான ஒரு அரசியல்வாதியாக அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் திகழ்கிறார்கள். அவருக்கென சில தனித்துவமான திறமைகள் இருப்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
கடந்த 16 வருடங்களாக தொடர்தேர்ச்சியாக இவரே தலைவராக கடமையாற்றி வருகிறார், இந்த 16 வருடங்களும் அவர் சாதித்தவைகள் என்ன? என்ற பட்டியலை தயார்படுத்துங்கள் தெரிந்துபோகும்.
ஆனால் இன்றைய திகதியில் முஸ்லிம் காங்கிரஸுக்னெ இவரைவிடவும் தகுதியான ஒரு தலைவர் தேவைப்படுகிறார்.
தீர்க்கபட முடியாத, அவசர அவசியமாக தீர்க்கபடவேண்டிய பல பிரச்சினைகள் நம் சமூகத்தில் பல தசாப்தகாலமாக இருந்துவருகின்றன, இவைகள் தொடர்பாக நிறையவே இந்த தலைமைத்துவத்திற்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால் அதனால் என்ன பயன்? இதுவரையும் ஒன்றும் நடந்தபாடில்லை.
இல்லை உண்மையில் இவரைவிட நம்மிடத்தில் தகுதியான வேறு அரசியல்வாதி யாரும் இல்லை என்ற உங்களுடைய வாதத்தை நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏன் ஆயுற்கால தலைமைத்துவம் நம் சமூகத்திற்கு தேவைப்படுகிறது..........? மாற்றங்கள் ஏதும் தேவை இல்லையா? விடை தர முடியுமா..?
ஆதரவளார்கள் மற்றும் பாவனையாளர்களின் ஆலோசனைகளை செவியுற்ற பல நிருவனங்கள் தான் இன்று பிரபல்யம்வாந்த சர்வதேசம் போற்றும் பட்டியலுக்குச் சொந்தமானவை என்ற மேலதிகமான ஒரு பொது அறிவையும் இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.
நாம் அமைச்சர் ரவூப் ஹகீம் பற்றிப் பேசினால் அமைச்சர் ரிக்ஷாத் பதியுதீனில் ஆதரவாளர் என்ற லேபலை எம்மீது குத்திவிட்டு கடந்துசெல்கிற முஸ்லிம் காங்கிரஸின் போலி போராளிகளாக இருந்து காலநேரத்தை கடத்தாமல் நமது கருத்துக்கு பின்னால் உள்ள நியாங்கள் என்ன என்பதை கொஞ்சம் சிந்தித்து உணருங்கள்.
நம் அரசியல்வாதிகளுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் சமூக பிரச்சினை என்றால் என்ன ? தேசிய பிரச்சினை என்றால் என்ன? வேற்றுமையில் ஒற்றுமை என்றால் என்ன? சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது? எழுத்துத்துறை தர்மம என்றால் என்ன? பத்திரிகை தர்மம் என்றால் என்ன? என்றெல்லாம் பாடம் எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்