அமீரகம்
அமீரகத்தில் மாதம்மாதம் பெட்ரோல் விலை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அமீரகத்தில் மாதம்மாதம் பெட்ரோல் விலை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எதிர்வரும் 2017 மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 பில்ஸூம் (காசுகள்), டீசலின் மீது 2 பில்ஸூம் (Fils) உயர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பு: ஒப்பீட்டுக்காக 2017 பிப்ரவரி மாத விலை அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
1. சூப்பர் 98 – புதிய விலை 2.03 திர்ஹம் (2 திர்ஹம்)
2. சூப்பர் 95 – புதிய விலை 1.92 திர்ஹம் (1.89 திர்ஹம்)
3. ஈ பிளஸ் 91 – புதிய விலை 1.85 திர்ஹம் (1.82 திர்ஹம்)
4. டீசல் - புதிய விலை 2.02 திர்ஹம் (2 திர்ஹம்)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 56.65 டாலருக்கும், அமெரிக்காவில் பேரல் ஒன்று 54.47 டாலருக்கும் விற்பனையாகிக் கொண்டுள்ளது.
கட்டார்.
2017 - மார்ச் மாதம் 1ம்(நாளை முதல்) திகதியிலிருந்து 91ஒக்டாட் பெற்றோலின் விலை 1.55 கட்டார் றியால்களில் இருந்து 1.60 கட்டார் றியால்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் தொழில் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் 95 ஒக்டாட் சூபா் பெற்றோலின் விலை 1.65 கட்டார் றியால்களிலிருந்து 1.70 கட்டார் றியால்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1.50வாக விற்கப்பட்டு வந்த டீசல்களின் விலை 1.55 கட்டார் றியால்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் கடந்த ஒரு வருட காலமாக கச்சா எண்ணெய்யின் விலை சரிவடைந்து காணப்படுவதால் மேற்படி விலையேற்றங்கள் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் மாதங்களிலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கட்டார் செய்திகள் தெரிவிக்கின்றன.
