ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை நியூயோர்க் செல்கின்றார்.
இவர் எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் இலங்கையின் சமகால முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பார் என்று ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவர்களின் அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 25ஆம் திகதி புதன்கிழமை உரையாற்ற உள்ளார்.
அத்துடன் அக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை பன்னாட்டு விவகாரங்கள் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஞாயிற்றுக்கிழமை ஐ.நா சென்று பெரும்பாலும் வெள்ளிக்கிழமை நாடு திரும்புவார். ஆனால் ஏனைய விடயங்கள் குறித்து பின்னரே அறிவிக்கமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.