பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு மாலை 5.00 மணியளவில் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டிய 25 வயது இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இச் சம்பவம் ஞாயிறன்று புத்தளம் பகுதியிலுள்ள தளுவ மாம்புரி என்னுமிடத்தில் இடம்பெற்றது. இப்பகுதியிலிருந்து தில்லையடி என்னுமிடத்திலுள்ள பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அருகிலுள்ள பஸ் ஆசனத்தில் அமர்ந்த வாலிபரே இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
மாணவி அழுதுகொண்டு பெற்றோர்களிடம் முறையிட்ட பின் புத்தளம் பொலிஸாரிடம் சென்று முறையிட்டனர்.
இதனையடுத்து ஊரவர்கள் ஒன்றிணைந்து சந்தேக நபரை பிடித்துள்ளனர்.
சந்தேக நபரை பொலிஸார் புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். இக்பால் முன்னிலையில் ஞாயிறன்று ஆஜர் செய்தனர். சந்தேக நபரை அடையாளம் காண்பதற்காக புதன்கிழமை அடையாள அணிவகுப்பை நடத்தும்படி உத்தரவு பிறப்பித்த நீதிவான் அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
