பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவராக மீண்டும் ஷஹீட் அப்ரிடி நியமிக்கப்படுவதற்காக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் அணிக்காக கடந்த 17 வருடங்களாக விளையாடி வரும் அப்ரிடி 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண ஒரு நாள் போட்டிகளில் தலைவராக கடமையாற்றிருந்தார்.
இந்நிலையில் இவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அப்ரிடி கூறுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீண்டும் எனக்கு தலைமையை வழங்கினால் சவாலாக இதனை நான் ஏற்றுக்கொள்ளவேன் என தெரிவித்துள்ளார்.
அணியின் மூத்த வீரர்கள் தென் ஆபிரிக்காவுடனான தொடரில் தங்களது பங்களிப்பை மேலும் சிறப்பாக வழங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஒரு நாள் போட்டிகளுக்கு அப்ரிடி தலைவராக நியமிக்கப்பட்டாலும் டெஸ்ட் தலைவராக தொடர்ந்தும் மிஸ்பா உல் ஹக் செயற்படுவார். அத்துடன மொஹமட் ஹபீஸ் தொடர்ந்தும் இ20 தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது
