Tuesday, November 5, 2013

பொது மன்னிப்பு காலம் நிறைவு: கைது வேட்டையில் சவுதி: இரு இலங்கையர்கள் கைது

பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சவுதி அரேபிய அரசாங்கம் இறங்கியுள்ளது.

அதன்படி, விசா காலாவதியாகியும் சவுதி அரேபியாவில் தங்கியிருந்த இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபிய தெற்கு வலயத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்புக் காலம் கடந்த மூன்றாம் திகதியுடன் முடிவடைந்தது.

எனினும் இன்னும் 1200 இலங்கையர்கள் சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ளதாக ஜெத்தா நகரில் உள்ள இலங்கை அலுவலகத்தின் தொழில் பிரிவின் செயலாளர் எம்.பி.எம்.சரூக் தெரிவித்தார்.

இவர்களில் 50 பேர் இலங்கை அலுவலகத்தின் முகாமில் தங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பொது மன்னிப்பு காலத்தில் 10,000 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் இன்னும் 6000 பேர் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments