சிலாபம் - புத்தளம் வீதியில் முந்தல் பிரதேசத்தில் லொறி மற்றும் பஸ் வண்டிகள் இரண்டு மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலத்த காயமடைந்த நால்வர் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்றும் (08) பகல் வேளையில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறி முந்தல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதன் பின்னதாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்கள் இரண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளன.
முந்தல் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
