Wednesday, July 9, 2014

Officeயில் வைத்து 7ம் ஆண்டு மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் கைது


ஹம்பாந்தோட்டை, அன்தரவெவ கீழ்பிரிவு பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் அப்பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 


மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின்படி சந்தேகநபரான அதிபர் நேற்று  (08) கைது செய்யப்பட்டுள்ளார். 



கடந்த 4ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அதிபரது அறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாணவி பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். 



இதன்பின்னதாக பெற்றோர் ஹம்பாந்தோட்டை பொலிஸில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். 



வைத்திய பரிசோதனைகளுக்காக மாணவி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



பொலிஸில் முறைப்பாடு செய்ததை அறிந்த, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் தமது வீட்டுக்கு வந்து முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்ததாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். 



சந்தேகநபர் நாளை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Disqus Comments