இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனங்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஜென் சாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களும், சிவில் சமூக நிறுவனங்களும் தமது ஊடகச் செயற்பாடுகளையும், நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள உத்தரவு தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவானது தமது கவலையை வெளியிடுகின்றது.
பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உள்ளடங்கலாக இலங்கையின் நீண்டகால ஜனநாயக விழுமியங்களை வலிவற்றதாக்குவதாக இந்த உத்தரவு அமைந்துள்ளது.
இலங்கையின் ஜனநாயக விழுமியங்களுக்காக அளப்பரிய பங்கினை அளிக்கும் சிவில் சமூக நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்
