வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்காக நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் சனிக்கிழமை காலை தமக்கு அருகில் உள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திவிட்டு வாக்களிக்க முடியும் என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும் வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே இவ்வாறு வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாளை சனிக்கிழமை காலை ஏழு மணிமுதல் மாலை நான்கு மணிவரை வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.