வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் போது அவர்களால் எடுத்து வரப்படும் 9 பொருட்களுக்கு முற்றாக சுங்க வரி விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறைந்தது ஒரு வருடமாவது வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு தாயகம் திரும்பும் போது இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்படுமென பிரதி சுங்க பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பணிப்புரிந்து விட்டு இலங்கை திரும்பும் பயணிகளுக்கு தற்போது வழங்கப்படும் வரிவிலக்குச்சலுகையை மேலும் அதிகரிப்பதற்கு இலங்கை சுங்கதிணைக்களம் தீர்மானித்துள்ளது.
குளியல் அறை பொருட்கள், படுக்கை அறை பொருட்கள், 350 சி.சிக்கு குறைவான மோட்டார் சைக்கிள் போன்றவற்றிற்கு வரிவிலக்கு அளிக்கப்படும். சூரிய சக்தியால் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கருவிகள், கணினிகள், மடிக்கணினி, கையடக்க தொலைபேசிகள் இரண்டு என்பவற்றை எடுத்து வரலாம். 55 அங்குலத்திற்கு குறைவான அனைத்து தொலைகாட்சிகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும். இது தொடர்பான தீர்மானம் அண்மையில் வெளியிடப்பட்டது. ஒரு வருடத்திற்கு மேல் வெளிநாடுகளில் பணியாற்றியவர்களுக்கு தான் இவ்வாறு சலுகை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.