Tuesday, March 28, 2017

சம்மாந்துறை கல்வி வலயத்தில் 9A பெற்று சாதனை புரிந்த இரட்டை சகோதரிகள்

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில் இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9 A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
றாணமடு இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அற்புதராஜா மிராளினி மற்றும் அற்புதராஜா விதுசனா எனும் இரட்டையர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.தியாகராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர்களுக்கு நாவிதன்வெளிக் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர்கள் இருவருக்கும் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments