(பாறுக் ஷிஹான்) வட மாகாணத்தில் சிறந்த உற்பத்திகளை மேற்கொண்ட தொழில் முயற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா யாழ் வர்த்தக தொழிற்துறை மன்ற தலைவர் விக்னேஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நேற்றைய தினம்(08) குறித்த நிகழ்வு ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதுடன் இவ் விருது வழங்கல் விழாவில் பிரதேச செயலாளர்கள் வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள் முதலீட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் கௌரவ விருந்தினராக தேசிய தொழில் முனைவோர் அபிவிருத்தி சபையின் தலைவர் ஒமர் ஹமீல் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பீடாதிபதி வேல்நம்பி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுனவதி தெய்வேந்திரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஒவ்வொரு துறையிலும் தமது உற்பத்திகளை சிறப்பாக மேற்கொண்டுவந்த உற்பத்தியாளர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



