Thursday, July 6, 2017

“கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும்” - சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகள் தீர்மானம்!

மத்திய கிழக்கு அண்டை நாடுகளால் விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை கத்தார் நிராகரித்தது. இதையடுத்து கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என்று செளதி அரேபியா அறிவித்துள்ளது.
கத்தார் விவகாரம் குறித்து நான்கு அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கெய்ரோவில் கலந்தாலோசித்தபோது, தங்களின் நிபந்தனைகளுக்கு கத்தார் அளித்த "எதிர்மறையான" பதில் வருத்தமளிப்பதாக தெரிவித்தனர்.
"நிலைமையின் தீவிரத்தையும் ஆழத்தையும்" கத்தார் புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் கடந்த மாதம் கத்தார் உடனான உறவுகளை துண்டித்துவிட்டன.
ஜிகாதி குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டிய இந்த நாடுகள், கத்தாரின் கொள்கைகளில் பெரும் மாற்றங்களைக் கோரியிருந்தன.(BBC TAMIL)
Disqus Comments