Friday, April 20, 2012

விருதோடை முஸ்லிம் மகா வித்யாலய ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்

முதலாம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களின் பிரச்சினை காரணமாக ஆசிரியை ஒருவர் பெற்றோரினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பு/ விருதோடை முஸ்லிம் மகா வித்யாலய ஆசிரியர்கள் நேற்று  காலை முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர் .

குறித்த பாடசாலையில் அதிபரும், அலுவலக ஊழியரும், முகாமைத்துவ உதவியாளரும் மாத்திரமே  கடமையில் ஈடுப்பட்டதுடன்  ஏனைய 25 ஆசிரியர்களும் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்தனர்.


குறித்த பாடசாலைக்குள் நேற்று புதன்கிழமை சென்ற பெற்றோர் தரம் 1 இல்; கல்வி கற்கும் தனது மகனுக்கும் மற்றுமொரு மாணவனுக்குமிடையாலான பிரச்சினை தொடர்பாக குறித்த மாணவனின் தாயான ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதுடன் அவரை தாக்கியும் உள்ளனர்.



இது தொடர்பில் குறித்த ஆசிரியை புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


இச் சம்பவத்தில் ஆசிரியை தாக்கப்பட்டமையினை கண்டித்தும், அவருக்கு நியாயம் பெற்று கொடுக்க வேண்டுமென கோரியும் இன்று ஆசிரியர்கள் சுகவீன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
 மேற்குறித்த தகவல்கள் அனைத்தும் (பார்க்க) டெய்லி மிர்ரர் web site யில் பிரசுரமாகி இருந்தது.

எவ்வாறு தான் இருந்தாலும் மேற்படி பெற்றாரின்  ஈனச் செயல் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் தற்போதைய நிலமையில் மேற்படி பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை பாரிய அளவில் காணப்படுகின்றது. மேற்கண்டவாறு  சம்பவங்கள் நடக்குமாயின் மேலதிக ஆசிரியர்களை பெற்றுக்கொள்வது சாத்தியமற்று போவதோடு ஏற்கனவே உள்ள ஆசிரியர்களையும் மன உளைச்சலுக்குஇட்டுச்செல்லும் என்பதனை அனைத்து பெற்றார்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இப்படிப்பட்ட நிகழ்வுகளின் காரணமாக பிள்ளைகளின் கல்வியே பாதிக்கப்படும் என்பதனையும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளின் எந்த விட பிரச்சினையும் ஏற்படாது என்பதனையும் பெற்றாருக்கு சார்பாக வாதாடக்கூடிய அன்பர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதனை பணிவாக கேட்டுக் கொள்கின்றோம்.
Disqus Comments