புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் ஓரு சிறிய கிராமம்
‘புழுதிவயல்’ கிராமமாகும். இக்கிராமத்தின் ஆரம்பக் காலத்தை பார்ப்போமாயின்
கிறிஸ்துவூக்கு முற்பட்ட காலத்திலே அந்நிய நாடுகளுடன் (இந்தியா,சீனா,
உரோமாபுரி,பாரசீகம்) இலங்கை வர்த்தக தொடர்புகளைக் கொண்டுடிருந்தது. இதனால்
இலங்கையில் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்து பல்வேறுபட்ட பிரதேசங்களில்
குடியேறினர். இவ்வாறு குடியேறியவர்கள் 13ம் நுற்றாண்டிலே எமது புழுதிவயல்
கிராமத்திலும் குடியேறினர். இவ்வாறு நமது ஊரில் குடியேறியவர்கள்
(அரேபியர்கள்) முஸ்லிம்கள் என்பதால், ஓலைக் குடிசையைப் போல பள்ளி ஓன்றை
அமைத்து தொழுது வந்தனர் அதன் பின் இந்தியாவின் கோட்டைப் பட்டணம் நாகூரைச்
சேர்ந்தவர்களான பட்டானி சாஹிபு, ராவூத்தர் சாஹிபு, நெய்னா முஹம்மது சாஹிபு
போன்றவர்களும் பள்ளியில் கடமைபுரிந்து வந்தனர். அதனைத் தொடந்து
வாழ்ந்தவர்களால் எமது கிராமப்பள்ளி அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆரம்ப
காலத்தில் வாழ்ந்தவர்களின் பிராதான தொழிலாக நெற்பயிர்ச் செய்கை (கரம்பை
தொடக்கம் கணமூலை வரை) மேற்கொள்ளப்பட்டது.
இந்த நெற் பயிர்ச்செய்கையினாலேயே
‘புழுதிவயல்’ என்ற பெயர் வரக் காரணமாக இருந்தது.
எப்படியெனில் எமது கிராமம் இயற்கையாகவே வயல் பிரதேசத்தைக்
கொண்டிருந்தமையால் நெற் பயிர்ச்செய்கையின் அறுவடைக காலம் முடிந்த கோடைக்
காலங்களில் வயலில் புழுதி (தூசி) அதிகமாகக் காணப்பட்டதால் நெற்
பயிர்ச்செய்கையை தொடர்து மேற்nhகள்ள முடியாமல் கைவிடப்பட்டது. நெற்
பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாத போது வியாபாரிகளின் கூடுதலான வினாக்களுக்கு
பதிலாக வயலில் புழுதி கூடியதால் மேற்கொள்ள முடியாது என்ற சொற்பிரயோகமே
இங்குள்ள மக்களால் அதிகமாகப் பிரயோகிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த
ஊருக்கு ‘புழுதிவயல்’ எனும் பெயர் வந்தது.
நெற்பயிர்ச்செய்கையை கைவிட்டவர்கள் தெங்கு பயிர்ச்செய்கையிலும் பல்வேறு
விவசாய உற்பத்திகளிளும் ஈடுபடுகின்றனர்,
எமது ஊரில்
வெளிநாட்டவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஓரு சான்றாக அண்மையில் எமது
கிராமத்தில் கண்டெடுக்கப்ட்ட நாணயங்களைக் குறிப்பிடலாம். இந்நாணயங்கள்
ஆரம்ப காலத்தல் வாழ்ந்தவர்கள் கொண்டு வந்தவை என்பதை அந்நாணயங்களைப்
பார்த்து அறிய முடிகிறது.
எமது புழுதிவயல் கிராமத்தில்
இன்றைய கால கட்டத்தில் சுமார் 800 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.
இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம், மீன் பிடித்தல் போன்றன காணப்படுகின்றன,
வயல் பிரதேசமாகக் காணப்பட்ட இடங்களை இறால் பண்ணைகள் அமைத்து மாற்றி
வருகிண்றனர். இந்த இறால் பண்ணைகள் மூலம் அந்நிய செலவாணியைப் பெறுகின்றனர.;
அத்தோடு எமது கிராமத்தில் பாடசாலை, பள்ளிவாசல், வைத்தியசாலை, தபாற் கந்தோர்
மின் வசதி போன்றவைகளும் காணப்படுகின்றன. எந்தப் பக்கம் பார்த்தாலும்
தென்னை மரங்களால் வானவளவூ உயா;ந்த சோலைக் காடு போலத் தோற்றமளிக்கிறது.
இந்தக் கிராமத்தவர்கள் ஆசிரியர், வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர்,
என்று கல்வி இலும் முன்னேறி வருகின்றனர். தொடரும் காலங்களில் இந்தச்
சின்னஞசிறிய கிராமத்தில் பல்வேறுபட்ட அபவிருத்தியூம் முன்னேற்றமும்
சிறந்ததாக அமையூம் என்பது எம் எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
கலாசார
சமய அலுவல்கள் அமைச்சு வெளியிட்ட “புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் வரலாறும்
பாரம்பரியமும் ” என்ற நூலில் பின்வரும் தகவல்கள் காணப்படுகின்றது.
01.
1921ம் ஆண்டில் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் ( கிராமங்கள் அடிப்படையில்
)புத்தளம் மாவட்டத்திலேயே புத்தளம் நகர சபை இ கல்பிட்டி நகரத்திற்கு அடுத்த
படியாக எமது புளுதிவயல் கிராமமே அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமம்
ஆகும் . 635 பேரில் 605 பேர் முஸ்லிம்கள் ஆகும் . இது 95.25 வீதமாகும்.
ஆதாரம் : 1921 குடிசன மதிப்பீடு
02. புளுதிவயல் முஸ்லிம்
வித்தியாலயம் இது ஓர் இரண்டாம் தர பாடசாலை ஆகும் .இப்பாடசாலை 1936 இல்
ஆரம்பிக்கப்பட்டது. இப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாடசாலை இது
ஆகும். இதற்காக முன்னின்று உழைத்த பெருமக்களில் மர்ஹூம் காதர் மீரா லெவ்வைஇ
வா. இ. இபுராஹிம்இ நெய்னா மரிக்கார் ஆகியோர் முக்கியமானவர்கள். இப்பாடசாலை
காணியை மர்ஹூம் இ.காதர் லெவ்வை வழங்கினார். புத்தளம் மாவட்டத்தில் 46 பழமை
வாய்ந்த பாடசாலைகளில் 11 வது இதுவாகும். ஆனால் இதற்கு பிறகு ஆரம்பிக்கபட்ட
பல பாடசாலைகள் -சீ ஆக காணப்படுகிறது.
03. பட்டாணி சாஹிப் தர்ஹா
(பள்ளி ) புளுதிவயல் புளுதிவயல் கிராமத்தில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல்
சுமார் 300 வருடங்களுக்கு முன்பு ஓர் ஓலைக் கொட்டிலாக கட்டப்பட்டுள்ளது.
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கல்லால் கட்டப்பட்டுள்ளது. குராசான் என்ற
பகுதியில் இருந்து வந்ததாக நம்பப்படும் பட்டாணி சாஹிப் , ராஉத்தர்
சாஹிப்,நெய்னா முஹம்மத் சாஹிப் என்ற மூன்று பெரியார்கள் இங்கு
அடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பள்ளிவாசலை மையமாக வைத்து
நீண்டகாலமாக கொடி எடுக்கப்பட்டுள்ளது.1960 ஆம் ஆண்டுடன் அவ்வழமை
நின்றுவிட்டது.
தொகுப்பு:
எம்.ஆர்.எம் பைனாஸ்
எம்.எஸ்.எம் முஸ்பிக்
( நன்றி புழுதிவயல் முகநூல் பக்கம் )