அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் உடைக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அரசாங்கத்தினால் கட்டிக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
எந்த நபருக்கோ சொத்துக்கோ தீங்கு விளைவிக்க முடியாது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
பேருவளை பிரதேச செயலகத்திட்குட்டபட்ட அளுத்கம, பேருவளை மற்றும் தா்கா நகா் ஆகிய பிரதேசங்களில் சுமுக நிலையை ஏற்படுத்துவதற்கான முக்கி சந்திப் பொன்று இன்று பேருவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பௌத்த மற்றும் முஸ்லிம் சமயத்தலைவா்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கு பற்றினார். இதன்போதே அவா் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்
இந்தக் கூட்டத்தில் அமைச்சா்களான ரோஹித அபேகுணா்தன, மோ்வின் சில்வாஇ ஜனாதிபதி செயலாளா் லலித் வீரதூங்க , அகில இலங்லை ஜம்யிய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரா்கள் என பலா் கலந்து கொண்டனா்.