அளுத்கம வன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டயீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், பக்கச் சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டார்.
மேற்படி வன்முறை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக பேருவளைக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி,பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்களுக்கோ உடைமைகளுக்கோ தீங்கு விளைவிக்கும் அதிகாரம் எவருக்குமில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி,இங்கு பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.