ஒரு அரசாங்க அமைச்சராகவும், ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவராகவும் இருப்பதையிட்டு தான் வெட்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அளுத்கம, பேருவளைப் பிரதேசங்களுக்கு இன்று விஜயம்செய்துள்ள அமைச்சர், அங்கு எமது டெய்லி சிலோனிற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்:
வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடியுமான முயற்சிகளை மேற்கொண்டு அரசாங்கத்திடமிருந்து இழப்பீடுகளை பெற்றுத்தருவதாகவும், இன வன்முறைகளை தூண்டும் விதமாக நிகழ்த்தப்படும் உரைகளுக்கு தடைச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த வன்முறைத் தாக்குதலுக்கு அரசாங்கம் சரியானதொரு தீர்வு வழங்காவிட்டால், சர்வதேசத்தின் உதவியை நாடுவதாகவும் தெரிவித்த அவர் கடும்போக்கு பெளத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பை தடை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.