பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இன்று சென்னை R.சிதம்பரமுத்து மைதானத்தில் இடம் பெற்ற ஐந்தாவது IPL தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தலமையிலான கல்கத்தா நைட் ரைடர் அணி ஐந்து விக்கட்டுக்களால் சாம்பியனானது.
நாணய சுயற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் M.S. டோனி முதலில் துடுபாட்டத்தை தீர்மானித்தார். அந்த வகையில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கபட்ட 20 Overகளில் 3 விக்கட்டுகளை மட்டும் இழந்து 190 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்த கல்கத்தா நைட் ரைடர் அணி இரண்டு பந்துகள் மீதமாக இருக்கின்ற நிலையில் 5 விக்கட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை அடைந்து சாம்பியனானது.