இலங்கைத்திரு நாட்டில் கடந்த காலமாக விலையேற்றம் என்பது ஒரு சாதாரண விடயமாகி விட்டது. அந்த வகையில் இன்று எதிர் பாராத வகையில் மிக அத்திய அவசியப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பின்வரும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.
பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சிமெந்து ஆகிய பொருட்களின் விலை இன்று நள்ளிரவுடன் அமூலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் 400 கிலோக்ராம் பால்மாவின் பக்கற்றின் விலை 63 ரூபாவினாலும், ஒரு கிலோ பால்மா பக்கற்றின் விலை 163 ரூபாவினாலும் அதிகரிக்கப் பட்டுள்ளது என்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் வாயுவின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப் பட்டுள்ளது. அத்தோடு 50 கிலோ கிராம் சீமெந்து பக்கற்று ஒன்றின் விலையை 70 ரூபாவால் அதிகரிக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்பதை நுகர்வோர் அமைச்சு தெரிவித்துள்ளது.