Friday, June 1, 2012

விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை



புத்தளம் தெற்கு கோட்ட மட்ட விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சுமார் 850 மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில் 38 ஆசிரியர்கள் தேவையாக உள்ள நிலையில் 25 ஆசிரியர்கள் மட்டுமே காணப்படுகின்றனர். 13 ஆசிரியர் பற்றாக்குறையாக இருக்கும் போது ஒருநாளைக்கு அன்னவளாக 5 ஆசிரியர்களாவது விடுமுறை எடுக்கும் நிலமையும் காணப்படுகின்றது. படம் நடக்காது பல வகுப்புக்கள் காணப்படுவது மிகவும் கவலைக்குரியதாகும். ஆகவே ஒவ்வொரு நாளும் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாது மாணவர்களின் கல்வி மிக மோசமாக பதிக்கப்பட்டுள்ளது, பதிப்புக்குள்ளாக்கிக்கொண்டு இருக்கின்றது.

இது தொடர்பாக நாம் பாடசாலை அதிபர் NMM. Safeek அவர்களை தொடர்பு கொண்டபோது 38 ஆசிரியர்கள் தேவையான நிலமையில் 25 ஆசிரியர்கள் மட்டும் காணப்படுவதன் காரணமாக பாடசாலையை முகாமைத்துவம் செய்வது மிகவும் திண்டாட்டமாக காணப்படுவதாக ரெட்பனா செய்திகளுக்கு அவர் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறும்போது மிக முக்கிய பாடங்களில் ஒன்றான ஆங்கில பாடத்துக்கு ஆசிரியர் இல்லை எனவும் அதுபோல் க.பொ.த(உ/த)யிற்கு முக்கிய படங்களை எடுக்கக்கூடிய ஆசிரியர்களும் பற்றாக்குறையாக காணப்படுவதுடன் தகவல் தொழில் நுட்ப பாடத்துக்குமான ஆசிரியர் பற்றாக்குறையான நிலமை காணப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

மேற்படி பிரச்சினையை தகுந்த அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்த போதும் இது வரையில் இந்த சாதகமான முடிவுகளும் கிடைக்க வில்லை என்பதும் கலைக்குரிய விடயமாகும்.
Disqus Comments