Friday, July 13, 2012

அறபு நாடுகளின் இஸ்லாமிய சரியா சட்டமே இலங்கைக்கு அவசியம்; விமல் வீரவன்ச!


சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் குற்றச் செயல்கள் போதைவஸ்த்து போன்ற குற்றங்களுக்கு அறபு நாடுகளில் அமுலாக்கும் இஸ்லாமிய சரியா சட்டம் போன்றதொரு சமமானதொரு சட்டமே இலங்கைக்கும் மிகவும் அவசியமாகும். என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இந்த நாட்டில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்துச் கொண்டே செல்கின்றன. இக் குற்றச் செயல்களில் சிறுவர்களை பாலியலுக்கு ஈடுபடுவோருக்கு ஆகக்கூடிய தண்டனையாக மரணதண்டனையாவது விதிக்க வேண்டும். அதற்காக இந்த நாட்டில் உள்ள குற்றம் சம்பந்தமான தண்டனைகள் மற்றும் நீதி, சட்டம் ஓழுங்குகளை மறுசீரமைத்து இந்த நாட்டில் உடனடியாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கமும் நீதி அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

நேற்று கிராண்பாஸில் உள்ள வீடமைப்புத்திட்டத்தில் புதிதாக சமுகசேவைகள் மண்டபமொன்றை திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்;ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது;

குற்றச் செயலில் ஈடுபடுவோரை சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பது ஒரு சுற்றுப்பிரயாணம்போல் ஆகிவிட்டது. குற்றவாளிகள் வீடுகளில் இருப்பதனை விட தற்பொழுது சிறைச்சாலைகளில் கூட அங்கு அவர்கள் சுகபோக வாழ்க்கையே அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு கையடக்கத் தொலைபேசிவசதிகள், குடிவகைகள், போதைவஸ்து நாளந்தம் அவருக்கு பழமும் பாழும் கொண்டுசெல்வதற்கு உறவினர்கள் சந்திக்கின்றனர். இதனை அவர் ஒரு சுற்றுப்பிரயாணம் போன்று அனுபவித்து வெளியில் வந்தவுடன் மீண்டும் அவர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒருபோதும் இந்த நாட்டில் குற்றச் செயல்கள் குறையப்போவதில்லை. அறபு நாடுகளில் அமுலாக்கும் சரியா சட்டம் இலங்கைக்கும் மிகவும் அவசியமாகும். இவ்வாறு இலங்கையிலும் அமுல்படுத்தினால் தான் குற்றச்செயல்கள் குறைவதற்கு இடமுண்டு.

ஒரு நாளைக்கு சராசரியாக 6 சிறுமிகள் துஸ்பிரயோகங்கள் இந்த நாட்டில் நிகழ்கின்றன. நாளந்த பத்திரிகைகளில் அறியக்கூடியதாக உள்ளது. பத்திரிகைகளுக்கு வராமல் எத்தனையோ துஸ்பிரயோகங்கள் நிகழக்கூடும்.

13இலட்சம் ருபா செலவில் கிராண்பாஸ் சிரிமாபுரவில் உள்ள 450 குடும்பங்கள் பயண்படுத்தக் கூடிய சமுக சேவை மண்டபம்மொண்றை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டது. 2011,2012; ஆணடுகளில் மட்டும் கொழும்பு வடக்கு வீடமைப்பு அலுவலகத்தினால் மட்டும் 20 கோடி ருபாவுக்குரிய வீடமைப்பு அபிவிருத்தி வேலைகள், தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை நவீனமயப்படுத்தல் போன்ற வேலைகளை முன்னெடுத்துள்ளன எனவும் தெரிவித்தார்.

 
நன்றி :- மெட்ரோ மிர்ரர் 
Disqus Comments