2013ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்
பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர்
வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் பரீட்சை நடைபெற்ற காலத்தில் சீரற்ற காலநிலை
நிலவியதனால், இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில்
மீளவும் சில பரீட்சைகள் நடைபெற்றன.
சீரற்ற காலநிலை காரணமாக சில பரீட்சார்த்திகள் வேறு பரீட்சை நிலையங்களில்
பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இதனால் பெறுபேறுகளை வெளியிடுவதில்
சிரமங்கள் நிலவியதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் ஜே.புஸ்பகுமார
தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக பரீட்சை பெறுபேறுகளை வெளியீட முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.