Monday, March 25, 2013

புத்தளத்தில் புதையல் தோண்டிய இருவர் கைது


புத்தளம் கோட்டைப் பகுதியில் உள்ள புராதன விகாரைப் பகுதியில் புதையல் அகழ்வதற்கு முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் விசேட பொலிஸாரால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப் புதையல் அகழ்வு இடம்பெற்ற இடத்தில் நால்வர் இருந்த போதிலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 19 வயதான இளைஞன் எனவும் மற்றவர் 55 வயதான வயதானவர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Disqus Comments