Sunday, March 24, 2013

மாணவர்களுக்கு பொருளியல் பாடம் கற்பித்தார் கல்வி அமைச்சர் பந்துல

ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்துக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது பழைய தொழிலை ஞாபகப்படுத்தி இன்று அங்கு பாடம் நடத்தியுள்ளார்.

முன்னாள் தனியார் வகுப்பு ஆசிரியரான அவர் இன்றைய தினம் அங்கு இரு மணிநேரம் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் கற்பித்துள்ளார்.

ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயலத்தில் உயர்தரத்தில் கல்விபயிலும் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் பல்கலைக்கழம் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்ப்பார்ப்பென்றும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தான் வந்து பாடம் நடத்த தயாராக உள்ளதாகவும் இதன் போது அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.

 

Disqus Comments