ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 'நீல அலை' திட்டத்தின் கீழ் புதிதாக
அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது நாட்டில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புனரமைக்கும் பொருட்டு வடக்கு கிழக்கு
மாகாணம் உற்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் 'நீல அலை' அங்கத்தவர்களை
இணைக்கும் வேலைத்திட்டம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்
ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு இணங்க இவ்
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ், கற்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடையாமோட்டை, விருதோடை, நள்ளாந்தளுவ ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.