அனைத்து மாகாணங்களுக்கும் வண்ணத்துப்பூச்சி வகையொன்றின் பெயரை இடுவதற்கு சுற்றாடல்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வண்ணத்துப்பூச்சிகளை பாதுகாக்கும் விசேட திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்படுவதாக சுற்றாடல்துறை அமைச்சின் உயிர்பல்வகைமை செயலகத்தின்
பணிப்பாளர் பத்மா அபேகோன் குறிப்பிட்டார்.
இதற்கமைய ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது விசேட வண்ணத்துப்பூச்சியினங்களின் பெயர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
1. மத்திய மாகாணம் - Sri Lankan Tiger
2. சப்ரகமுவ - Sri Lankan Rose
3. தென் மாகாணம் - Sri Lanka Tree-in
4. வட மத்திய மாகாணம் - Banded Peacock
5. ஊவா - Paru Net
6. வடமேல் மாகாணம் - Lesa Albert Rose
7. மேல் மாகாணம் - Blue Glassy Tiger
8. கிழக்கு மாகாணம் - Spot Soft Tail
9. வட மாகாணம் - Large Guava Blue
இவ்வருட இறுதிக்குள் வண்ணத்துப்பூச்சி வகைகளை மாகாணங்களுக்கு
உத்தியோகபூர்வமாக பெரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.