Wednesday, April 3, 2013

மஹிந்த சிந்தனையின் கப்றுக வேலைத்திட்டக் கூட்டம் புழுதிவயல் கிராமத்தில்(படங்கள்)

Kapruka Purawara என்பது நாடு முழுவதுமாக தெரிவு செய்யப்பட்ட 180 
பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்ட 6 வருட  அபிவிருத்தி வேலைத்திட்டமாகும். இது 2011ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 22 பிரதேச செயலகங்களையும், 2012ம் ஆண்டும் 28 பிரதேச செயலகங்களையும், 2013ம் ஆண்டும் 30 பிரதேச செயலகங்களையும், 2014ம் ஆண்டு 35 பிரதேச செயலகங்களையும், 2015ம் ஆண்டு 35 பிரதேச செயலகங்களையும், 2016ம் ஆண்டு 30 பிரதுச செயலகங்களையும்  தெரிவு செய்து தென்னைச் செய்கையை ஊக்குவிப்பது இந்த அபிவிருத்தின் திட்டத்தின் முக்கிய நோக்கமாகுமு்.

மஹிந்த சிந்தனைக்கமைவாக நாடு முழுவதும் விஷேடமாக தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் இந்த திட்டத்தை அமூல்டுத்துவதற்காக கிராமங்கள் தோறும் கப்றுக குழுக்கள்  அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வேலைத்திட்டதின் மூலம் இலவசமாக தென்னம்பிள்ளைகள், பசளை வகைகள், இலகு தவணை அடிப்படையில் கடன் வழங்கள், தெங்கு உற்பத்திப் பொருட்களை ஊக்குவித்தல்,  விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சியும் தொழில்நுட்பத்தையும் பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இந்த வகையில் தென்னை முக்கோண வலையத்தில் அமைந்துள்ள புத்தளம் மாவட்டத்தில் முந்தல், கற்பிட்டி மற்றும் பள்ளம போன்ற பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களில் தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மேற்படி பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள மேற்படி கப்றுக அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புழுதிவயல் கிராமத்தில கப்றுக குழு அமைக்கும் கலந்துரையாடல்  புழுதிவயல் கிராம அதிகாரி ஆர்.எம்.அமீன் தலைமையில்  நேற்று புழுதிவயல் பாலா் பாடசாலைக் கட்டடத்தில் இடம்பெற்றது.

தென்னைப் பயிர் செய்கை தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூடத்தில் விவசாய திணைக்கள உயரதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான விளக்கங்களை வழங்கினர். மேற்படி கலந்துறையாடலில் நூற்றுக்கணக்கான ஊா்மக்களும் கலந்து  கொண்டனா்.




Disqus Comments