(RM. Ameen-GS) புத்தளம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட விருதோடை, நல்லாந்தலுவை, புழுதி வயல், கரம்பை
ஆகிய கிராமங்களின் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் மாதாந்த பொதுக்கூட்டம்
புத்தளம் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் H.K. சுமலசேன தலைமையில் கரம்பை கிராம
அலுவலகர் பிரிவின் சேவா பியச கட்டிடத்தில் கடந்த 2013.04.02 அன்று பி.ப. 4.00
மணிக்கு நடைபெற்றது.
இதில் ஊர்ப்பொது மக்களின் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு
நடவடிக்கை, மதங்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு, குற்றங்கள் போன்ற
விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப் பட்டன.
இந்தக்கூட்டத்தில்
புத்தளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு தலைமையதிகாரி, குறிப்பிட்
நான்கு கிராமங்களுக்கும் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம
அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக்
குழுக்களின் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.