நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்க்களே சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன.
புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியிலிருந்தே இந்த வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரி வாக்கெண்ணும் நிலையமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக புத்தளம் மாவட்ட செயலாளர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக புத்தளம் மாவட்ட செயலாளர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். எனினும், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஸ்தலத்திற்கு விரைந்து இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டார்.

இறுதியில் கண்டெடுக்கப்பட்ட அணைத்து வாக்குச்சீட்டுகளும் பொலிஸாரிடம் சீல் பண்ணப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நாளை இது தொடா்பான வழக்கு புத்தளம் நீதி மன்றதில் நடைபெறவுள்ளது. இந்த மோசடியின் பல அரசியல் போ்வழிகள் இருப்பதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.