Wednesday, September 25, 2013

அதிகாரிகள் பொறுப்பின்றி செயற்பட்டுள்ளனர் – தேர்தல்கள் ஆணையாளர்

வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

உத்தியோகத்தர்களின் பொறுப்பின்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். 

புத்தளத்தில் வாக்குச்சீட்டு மீட்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரி கட்டடத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் சில நேற்று (24) மாலை கைப்பற்றப்பட்டன. 

எண்ணி முடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் புத்தளம் மாவட்ட செயலக களஞ்சியசாலையில் வைக்கப்பட வேண்டும். 

ஆனால் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக குறித்த வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட்ட இடத்திலேயே கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Disqus Comments