புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள்
குறித்து தேர்தல்கள் திணைக்களம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி நேற்று முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் குற்ற விசாரணைப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் குற்ற விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது.
வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரி கட்டடத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் சில கடந்த 24ஆம் திகதி மாலை கைப்பற்றப்பட்டன.