வடமேல் மாகாண சபையின் ஆறாவது முதல்வராக தயாசிறி ஜயசேகர பதவியேற்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் அலரி
மாளிகையில் இந்தப் பதவியேற்பு வைபவம் இடம்பெற உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் புதிதாக வடமேல் மாகாண சபை கூடும்
தினம் அறிவிக்கப்படும்.
வடமேல் மாகாண அமைச்சரவையில் 3 குருணாகல் மாவட்டத்திற்கும்
01 புத்தளம் மாவட்டத்திற்கும் வழங்கப்பட உள்ளது. மூவர் புதுமுகங்களாக
இடம்பெற உள்ளனர். முன்னாள் முதல்வர் அதுல விஜேசிங்கவிற்கு எவ்விதப்
பொறுப்புகளும் வழங்கப்படமாட்டாது என அறியக் கிடைத்துள்ளது.
புதிய அமைச்சரவையில் கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகத்துறை
அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ இடம்பெற உள்ளமை
உறுதியாகியுள்ளது.