Wednesday, September 25, 2013

தோ்தலை மீண்டும் நடாத்தக் கோரி புத்தளம் பிரதேச செயலகத்திற்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம்

புத்தளம் மாவட்டத்தின்  தேர்தலை மீண்டும் நடத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டமொன்று இன்று புதன்கிழமை காலை புத்தளம் பிரதேச செயலகத்துக்கு  முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அன்ரூஸ் வாக்கு எண்ணப் பட்ட பாடசாலை வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டு இருந்தன.

இதனையடுத்தே  புத்தளம் மாவட்டத்தின் மாகாண சபை தேர்தலை மீண்டும் நடத்துமாறு கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை முன்வைத்து புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஒன்று இன்று காலை முதல் இடம் பெற்று வருகின்றது.

இந்தப் போராட்டத்தினை  ஜனசெத பெரமுன மேற்கொண்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக புத்தளம் பிரதேச செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Disqus Comments