Wednesday, September 25, 2013

இஸ்லாமிய ஐக்கிய விளையாட்டு விழா: கடற்கரை கரப்பந்தாட்ட ஆடைகள் தொடர்பாக சர்ச்சை….!!

3ஆவது இஸ்­லா­மிய ஐக்­கிய விளை­யாட்டு விழா இந்­தோ­னே­ஷி­யாவின் பலேம்பாங்க் நகரில் நேற்­று­முன்­தினம் ஆரம்­ப­மா­க­pயுள்­ளது.

46 நாடு­களைச் சேர்ந்த 1800 இற்கும் அதி­க­மான ஆண்­களும் பெண்­களும் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றனர். ஒக்­டோபர் முதலாம் திகதி வரை இப்­போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி சுசிலோ பாப்பாங் யுதொ­யோனோ ஆரம்ப விழாவில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார்.

இப்­போட்­டி­களில் பங்­கு­பற்றும் எகிப்­திய, சிரிய மற்றும் பலஸ்­தீன குழ­வி­ன­ருக்கு அவர் விசேட பாராட்­டு­களைத் தெரி­வித்துக் கொண்டார்.

‘இஸ்­லா­மிய நாடுகள் ஐக்­கி­ய­மாக வாழ முடியும் என்­பதை இப்­போட்­டிகள் மூலம் உல­குக்கு நிரூ­பிப்போம்’ என அவர் கூறினார்.

எனினும் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்றும் பெண் போட்­டி­யா­ளர்­களின் ஆடைகள் தொடர்­பாக சர்­ச­சைகள் ஏற்­பட்­டுள்­ளன.

கடற்­கரை கரப்­பந்­தாட்டம், மெய்­வல்­லுநர் போட்­டிகள், நீச்சல் போட்­டிகள் முத­லா­ன­வற்றில் பங்­கு­பற்றும் பெண்கள் பிகினி (நீச்­ச­லுடை) அணிந்து விளை­யா­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் பிகினி ஆடை­க­ளுக்கு தடை விதிப்­ப­தற்கு மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றனர்.

முத­லா­வது இஸ்­லா­மிய ஐக்­கிய விளை­யாட்டு விழா 2005 ஆம் ஆண்டு சவூதி அரே­பி­யாவில் நடை­பெற்­றது. 2010 ஆம் ஆண்டு ஈரானில் நடை­பெ­ற­வி­ருந்த போட்­டிகள் இலச்­சினை தொடர்­பான சர்ச்­சையால் இரத்துச் செய்­யப்­பட்­டன.

பிகினி ஆடைகள் தடுக்­கப்­பட்­டுள்ள சவூதி அரே­பி­யாவில் முத­லா­வது இஸ்­லா­மிய ஐக்­கிய விளை­யாட்டு விழா ­ந­டை­பெற்­ற­போ­தும்­ நீச்­ச­லுடை அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

அத்­துடன் ஆண் பெண்­க­ளுக்­கான போட்­டிகள் வௌ;வேறு தினங்­களில் நடை­பெற்­றன. பெண்கள் நீந்­து­வதை பார்க்க ஆண்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.
ஆனால், இந்­தோ­னே­ஷி­யாவில் இத்­த­கைய கட்­டுப்­பா­டுகள் இருக்­க­மாட்­டாது என இந்­தோ­னே­ஷிய ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

ஆண், பெண்­க­ளுக்­கான போட்­டி­களை வௌ;வேறு தினங்­களில் நடத்த வேண்­டு­மென்ற சில நாடு­களின் கோரிக்­கை­யை­யையும் இந்­தோ­னே­ஷிய அதி­கா­ரிகள் நிரா­க­ரித்­தனர்.

எனினும், இந்­தோ­னே­ஷி­யா­விலும் இவ்­வி­ட­யத்தில் சர்ச்சை நீடிக்­கி­றது. சுமத்­ராவின் ரியூ நகரில் நடை­பெ­ற­வி­ருந்த இப்­போட்­டிகள் பின்னர் ஜகார்த்தாவுக்கு மாற்றப்பட்டது.

ஆனால் மீண்டும் எதிர்ப்புகள் காரணமாக பெலேம்பாங்க் நகருக்கு போட்டிகள் மாற்றப்பட்டன. அந்நகரில் இரு மாதகால அவகாசத்தில் இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments