கருவலகஸ்வெவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்
எம். காமினி சரத்குமார விடுமுறை அறிவிக்காது வெளிநாட்டில் வேலைக்குச்
சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.
தப்போவ கிராம வைத்தியசாலை வைத்தியருடன் மோதலில் ஈடுபட்ட இப்பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக புத்தளம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதென கருவலகஸ்வெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எல்.பி. அபேரத்ன தெரிவித்தார்.
இந்நிலையில் காமினி சரத்குமார வெளிநாடு செல்வதற்கு முன் விடுமுறை கோரவில்லை. வெளிநாடு சென்ற பின்னரே விடுமுறை கோரியுள்ளார். ஆனால் பிரதேச சபை சக உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே மூன்று மாதங்கள் அவர் சபைக்கு சமூகமளிக்காவிடின் அது குறித்து கட்சி செயலாளருக்கு அறிவிக்கப்படும் என கருவலகஸ்வெவ பிரதேச சபைத் தலைவர் நீல் வீரசிங்க தெரிவித்தார்.