புத்தளம் - கொழும்பு வீதியில் மங்கள எளிய பகுதியில் இன்று காலை நடைபெற்ற
வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்திலிருந்து டெல்தோட்டை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வான் ஒன்று வீதியினை விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதினாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் காயமடைந்தவர்களில் 13 வயது சிறுமியும், 3 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர். விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.