கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை
ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள்
திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உரிய வகையில் நிரப்பப்பட்ட விண்ணப்பப்
படிவங்களை பாடசாலை பரீட்சார்த்திகள், தமது அதிபர் ஊடாக அனுப்பிவைக்க
வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார
தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக் கட்டணத்தை
தபால் அலுவலகங்களில் செலுத்தி பெற்றுக்கொண்ட ரசீதை இணைத்து முழுமையாக
நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும்
என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பிட்ட
திகதியின் பின்னர் அனுப்பிவைக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மேலும்
குறிப்பிட்டுள்ளது.