மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் ஜாதிக பலசேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கை,கால்கள் கட்டப்பட்டநிலையில் பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகிலேயே அவர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவருடைய ஆள்அடையாள அட்டையும் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டரக்கதேரர் அவசர சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் வாக்குமூலம் பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நிப்போன் ஹோட்டலில் அவர், அண்மையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை தடுத்ததுடன் அந்த மாநாட்டை நடத்தவேண்டாம் என பொதுபல சேனா அமைப்பினர் அவரை அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.